- தொண்டாமுத்தூர்
- திமுக
- கே.ஈஸ்வரசாமி
- பொல்லாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு இந்திய கூட்டணி
- சுகுணாபுரம்
- குனியமுத்தூர்
- அதுபாலம் ஆயிஷா மஹால்
- தின மலர்
தொண்டாமுத்தூர்,ஏப்.11: பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி நேற்று சுகுணாபுரம்,குனியமுத்தூர் பகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். ஆத்துப்பாலம் ஆயிஷா மஹாலில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியரிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
தொடர்ந்து சென்ற இடங்களில் மக்கள் திமுக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில்: திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் தொடர்ந்து நமக்கு கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும் எதிர்காலத்தில் தொடர்ந்து உங்களோடு இருந்து பணியாற்றிட நாடாளுமன்ற வாய்ப்பை தர வேண்டும்.எதிரணியில் இருக்கக்கூடிய இரண்டு வேட்பாளர்களும், அவர்கள் எங்கு வெற்றி பெற்றாலும், மோடிக்கு ஆதரவாக தான் செயல்படுவார்கள். எனவே இரண்டு வேட்பாளர்களை புறக்கணித்து நமது வாக்குகளை உதய சூரியன் சின்னத்திற்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் பிரச்னைகளை தீர்க்க என்னை தேடி வர வேண்டியது இல்லை. உங்கள் தொகுதியில் இருந்து வரும் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும். எதிர்காலத்தில் உங்களால் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பின்பு, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கிளை அலுவலகம் ஒன்றை திறக்கப்பட்டு, உங்களுக்காக பணி செய்ய உங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தாருங்கள். இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு எம்பி கிளை அலுவலகம் திறக்கப்பட்டு மக்கள் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எடப்பாடி எங்கு வெற்றி பெற்றாலும் அவர் மோடிக்கு ஆதரவாக தான் செயல்படுவார்கள்.எனவே இரண்டு வேட்பாளர்களை புறக்கணித்து உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திற்கு அளிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.தேர்தல் பிரசாரத்தில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி,தொகுதி பொறுப்பாளர் சிந்து ரவிச்சந்திரன், மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றி செல்வன்,வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சொக்கம்புதூர் கனகராஜ், திமுக பகுதி செயலாளர்கள் ராஜேந்திரன்,லோகநாதன், நிர்வாகிகள் ஜெயந்தி, தென்னை சிவா, பேரூர் தாமரை செல்வன்,மத்வராயபுரம் குணா, ராஜா, பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு எம்பி கிளை அலுவலகம் appeared first on Dinakaran.