×

தி.நகர் நடேசன் பூங்கா, ஜீவா பூங்காவில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரிப்பு

சென்னை: தி.நகர் நடேசன் பூங்கா, ஜீவா பூங்கா ஆகிய‌ இடங்களின், நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களிடம், தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்ச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரித்தார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரசாரம் முடிய இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர், தியாகராயர் நகர் நடேசன் பூங்கா, ஜீவா பூங்கா ஆகிய‌ இடங்களின், நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். கால் முறிவு இருந்தபோதும் காலையில் பூங்காவில் அமர்ந்து நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார்.

The post தி.நகர் நடேசன் பூங்கா, ஜீவா பூங்காவில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : T. Nagar Natesan Park, Jeeva Park ,Chennai ,DMK ,South Chennai Constituency ,Tamilchi Thangapandian ,T. Nagar Natesan Park ,Jeeva Park ,Tamil Nadu ,D. Nagar Natesan Park, Jeeva Park ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை...