- SRM கல்லூரி
- வேந்தர்
- சத்தியநாராயணன்
- செங்கல்பட்டு
- Sathyanarayanan
- SRM இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரி…
- துணை வேந்தர்
- தின மலர்
செங்கல்பட்டு: எஸ்ஆர்எம் கல்லூரியில் நடந்த பயோ எத்திக்ஸ் கருத்தரங்களில், செயற்கை நுண்ணறிவு மனித இனத்திற்கு மட்டுமே பயனளிக்க வேண்டும் என்று அக்கல்லூரியின் இணை வேந்தர் சத்தியநாராயணன் பேசினார். எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் செய்கை நுண்ணறிவுடன் இணைப்பது குறித்த 3 நாள் சர்வதேச பயோ எதிக்ஸ் பயிரங்கம் நடந்தது. அதில், அக்கல்லூரியின் இணை வேந்தர் சத்தியநாராயணன் சிறப்பு மலரை வெளியிட்டு பேசுகையில், ‘செயற்கை நுண்ணறிவு மனித இனத்திற்கு மட்டுமே பயனளிக்க வேண்டும். மேலும், இளைஞர்களின் அதிக ஈடுபாடு இருக்க வேண்டும். அவர்கள் எதிர்காலத்தில் அதன் பயன்பாடுகளில் பணியாற்றுவார்கள். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன பகுதிகளில் உலகம் தற்போது பெரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது.
தற்போதைய நிலையில், மருத்துவம், அறிவியல், பொறியியல், மேலாண்மை மற்றும் சட்டம் ஆகியவற்றில் உள்ள நிபுணர்களை ஒன்றிணைப்பது பொறுப்பான எதிர்காலத்தை நோக்கிய ஒரு நல்ல படியாகும்’ என்றார்.இதில், மருத்துவம், சுகாதார வல்லுநர்கள் மற்றும் உயிரியல் கல்விக்கான சர்வதேச கவுன்சில் ஆப் குளோபல் நெட்வொர்க்கின் பொதுச் செயலாளர் வேத்பிரகாஷ் மிஸ்ரா, தனது தொடக்க உரையில், மருத்துவத் துறையானது கலை மற்றும் அறிவியல் பங்களிப்புகளைத் தவிர, பச்சாதாபம், சமூகமயமாக்கல், மனிதமயமாக்கல், தொடுதல் ஆகியவற்றைக் கட்டாயமாக்குகிறது’ என்றார். முன்னதாக, கூட்டத்தை வரவேற்கும்போது, லெப்டினன்ட் கர்னல் ரவிக்குமார் பேசுகையில், ‘மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல், பயோஎதிக்ஸ் பற்றிய பரந்த பார்வையை வழங்குவதைத் தவிர, சுகாதாரப் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஆராயும்’ என்றார்.
The post எஸ்ஆர்எம் கல்லூரியில் கருத்தரங்கம்; செயற்கை நுண்ணறிவு மனித இனத்திற்கு பயனளிக்க வேண்டும்: இணை வேந்தர் சத்தியநாராயணன் பேச்சு appeared first on Dinakaran.