- அழகப்பா பல்கலைக்கழகம்
- கவர்னர்
- காரைக்குடி
- மாநாட்டு விழா
- காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்
- துணை வேந்தர்
- ஜி ரவி
- RN
- ரவி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வேந்தர்
- பல்கலைக்கழக
- திருச்சி
- இந்திய மேலாண்மை நிறுவனம்
- அமைச்சர்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 35வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. துணைவேந்தர் ஜி.ரவி வரவேற்றார். தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டம் மற்றும் தங்கப்பதக்கங்களை வழங்கினார். முதன்மை விருந்தினராக திருச்சி, இந்திய மேலாண்மை நிறுவன (ஐஐஎம்) இயக்குநர் பேராசிரியர் பவன்குமார் சிங் கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் 3 பேருக்கு அறிவியல் அறிஞர் பட்டம் (டி.எஸ்சி) மற்றும் 93 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. மொத்தம் 42,433 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதேபோல 24க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆளுநரிடம் நேரடியாக பட்டம் பெற விருப்பம் இல்லாமல் புறக்கணித்ததாக தெரிகிறது.
The post அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழா ஆளுநர் பங்கேற்பு அமைச்சர் புறக்கணிப்பு appeared first on Dinakaran.