×

இருசக்கர வாகனம் திருட்டு

கண்டாச்சிபுரம், ஏப்.4: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த பழைய கருவாட்சி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் தமிழ்வேந்தன்(35), சென்டரிங் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 30ம் தேதி நள்ளிரவில் வழக்கம்போல் வேலை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு மறுநாள் காலை வெளியே வந்து பார்த்தபோது தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் வழக்கு பதிந்து காணாமல் போன பைக்கை தேடி வருகிறார்.

The post இருசக்கர வாகனம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kandachipuram ,Tamilventhan ,Karuvakshi ,Villupuram district ,Dinakaran ,
× RELATED ரூ32,000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர்கள் கைது