×

ரூ32,000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர்கள் கைது


சென்னை: ரூ32 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டனர். ருவண்ணாமலை தாளகிரி ஐயர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (64), ஓய்வு பெற்ற ஆசிரியர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது தந்தை ராமச்சந்திரன், தபால் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பூர்வீக சொத்துக்கள் முறைப்படி பாகப்பிரிவினை செய்யப்பட்டபோதிலும், நகராட்சி அலுவலக பதிவேடுகளில் ராமச்சந்திரன் பெயரில் இருந்ததால், வரி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே, சொத்துக்களின் பெயர் மாற்றம் செய்ய கடந்த ஜனவரி மாதம் ரமேஷ் விண்ணப்பித்தார். இதற்கு நகராட்சி வருவாய் ஆய்வாளர் செல்வராணி மற்றும் வருவாய் உதவியாளர் ராகுல் ஆகியோர், ரூ50 ஆயிரம் கொடுத்தால்தான் பெயர் மாற்றம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். பின்னர், படிப்படியாக குறைத்து, ரூ30 ஆயிரம் கொடுக்கும்படி கூறினர். இதுபற்றி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் ரமேஷ் புகார் அளித்தார். போலீசார் அளித்த ரசாயனம் தடவிய ரூ30 ஆயிரத்தை தாளகிரி ஐயர் தெருவில் உள்ள வீடு அருகே வருவாய் ஆய்வாளர் செல்வராணி, வருவாய் உதவியாளர் ராகுல் ஆகிேயாரை நேற்று வரவழைத்து ரமேஷ் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

மற்றொரு ஆர்.ஐ. கைது: திருப்பூர் முத்தனம்பாளையம் கிராமம் ரங்கேகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவா (28). காய்கறி வியாபாரி. இவரது தந்தை ராஜேந்திரன் கடந்த பிப்ரவரி 16ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கு வாரிசு சான்றிதழ் கேட்டதற்கு, திருப்பூர் தெற்கு தாலுகா, நல்லூர் வருவாய் ஆய்வாளரான ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த மைதிலி (43), ரூ. 7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பேரம் பேசியதில் ரூ.2 ஆயிரமாக குறைத்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாயை நேற்று ஆர்.ஐ. மைதிலியிடம் ஜீவா கொடுத்தபோது மறைந்திருந்த போலீசார், ஆர்.ஐ. மைதிலியை கைது செய்தனர்.சர்வேயர் சிக்கினார்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றும் செல்வமாடசாமி (41), பெயின்டர் சிவலிங்கத்திடம் (52) பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.

The post ரூ32,000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ramesh ,Talagiri Iyer Street, Ruvannamalai ,Kandachipuram ,Villupuram district ,Ramachandran ,
× RELATED நீட் தேர்வு குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்