×

100 தடவை மோடி வந்தாலும் ‘நோ சான்ஸ்’: ஈடி ரெய்டு கொரோனா மாதிரி…யார் வீட்டுக்கும் வந்து போகும்…கருணாஸ் ‘கலாய்’

சிவகங்கை தொகுதி காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, முக்குலத்தோர் புலிபடை தலைவர் கருணாஸ் பேசியதாவது:  வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளை கூறு போட்டு அம்பானி, அதானிக்கும் பாஜ அரசு விற்கிறது. இது வழக்கமான தேர்தல் அல்ல. மண்ணை, நாட்டை மீட்க வேண்டிய தேர்தல். காங். ஆட்கி்க்காலத்தில் 50 லட்சம் கோடி கடன் இருந்தது. பாஜ ஆட்சியில் 1.50 லட்சம் கோடி கடனாக பெருகி விட்டது. மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்.

தேசத்தை கூறு போட நினைக்கின்றனர். பாசிச சிந்தாந்தம் தமிழ்நாட்டுக்கு தவறானது. இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு உள்ளது. மாநில முதல்வர்களை சிறையில் வைக்கின்றனர். எதிர்ப்பவர்கள் மீது ஈடி ரெய்டு விடுகின்றனர். ஈடி ரெய்டு கொரோனா போல ஆகி விட்டது. யார் வீட்டுக்கு வேண்டுமானாலும் வந்து போகும். தவறு செய்தவர்கள் பாஜவுக்கு சென்றால் புனிதர் ஆகி விடுவார்கள்.

100 தடவைக்கு மேல் மோடி தமிழகத்துக்கு வந்தாலும், தீய சக்திகள் தமிழ்நாட்டுக்கு வராது. அண்ணாமலைக்கு ஆதரவாக வடமாநிலத்தவர் இந்தியில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அண்ணாமலை 3வது இடத்துக்கு கூட வர மாட்டார். அவர் 20 ஆயிரம் புத்தகங்களை படித்ததாக கூறுகிறார். 20 ஆயிரம் பொய் புத்தகங்களைத்தான் அவர் படித்துள்ளார். அவர் தலைவர் மோடியும் பொய் புத்தங்களைத்தான் படித்துள்ளார். அடுத்த தலைமுறை வாழ இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். இவ்வாறு பேசினார்.

The post 100 தடவை மோடி வந்தாலும் ‘நோ சான்ஸ்’: ஈடி ரெய்டு கொரோனா மாதிரி…யார் வீட்டுக்கும் வந்து போகும்…கருணாஸ் ‘கலாய்’ appeared first on Dinakaran.

Tags : Modi ,Corona ,Karunas 'Kalai ,Sivaganga Constituency Congress ,Karti Chidambaram ,Trikulathor Tiger Force ,Karunas ,BJP government ,Ambani ,Adhani ,Karunas ' ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி