×

பதவியை பிடிக்கிற ஆசையே இல்லையாம்..தொண்டர்களுக்கு ராமதாஸ் லெட்டர்

பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று நான் கூறுவதற்கு பதவிகளை பிடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமல்ல. மாறாக, தடைப்பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்ற வேட்கை தான் காரணம். நாடாளுமன்றத்தில் நாம் எப்போதெல்லாம் வலிமையாக இருக்கிறோமோ, அப்போதெல்லாம் தமிழ்நாடும் வலுவாக உள்ளது. இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்;

நமது கூட்டணி தமிழ்நாடு, புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இதுவே நமது இலக்கு. நீங்கள் தான் காடுகளையும், மேடுகளையும், ஆறுகளையும், மலைகளையும் கடந்து சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். இனிவரும் நாட்களில் கடுமையாக உழைத்து வெற்றிகளை சாத்தியமாக்குங்கள். அது தான் எனது 45 ஆண்டுகால பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு நீங்கள் அளிக்கும் அங்கீகாரமாக அமையும்.

The post பதவியை பிடிக்கிற ஆசையே இல்லையாம்..தொண்டர்களுக்கு ராமதாஸ் லெட்டர் appeared first on Dinakaran.

Tags : Ramdas ,Ramadoss ,BMC ,Tamil Nadu ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரை...