×

₹3.63 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

ஓமலூர், மார்ச் 31: ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ₹3.63 லட்சத்திற்கு கொப்பரை விற்பனையானது. விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய அளவிலான மின்னணு கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், 41 வகையான எண்ணெய் பிழிதிறன் கொண்ட 4375 கிலோ கொப்பரையை 14 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வழக்கமாக வெயில் காலத்தில் கொப்பரை உற்பத்தி அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது தேங்காய் விற்பனையால், கொப்பரை உற்பத்தி குறைந்து ஏலத்திற்கான வரத்து சரிந்துள்ளது. அதே நேரத்தில் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்றைய ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ₹90.10க்கும், குறைந்தபட்சம் ₹57.11க்கும், சராசரியாக ₹87.97க்கும் கொப்பரை ஏலம் போனது. இதன்மூலம் ₹3 லட்சத்து 63 ஆயிரத்து 265 ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ₹3.63 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Omalur ,Omalur Regulatory Sale Hall ,Omalur, Salem district ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!