×

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு பல்வேறு சங்கங்கள், முக்கிய அமைப்புகள், பிரமுகர்கள் ஆதரவு

திமுக தலைவரும்-தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை பல்வேறு சங்கங்கள், முக்கிய அமைப்புகள் மற்றும் பிரமுகர்கள் நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சேலம் மாவட்டத் தலைவர் பெரியசாமி, துளுவ வேளாளர் சங்கத் தலைவர் ராஜீ, கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் கண்ணன், ஓசூர் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் மூர்த்தி, பேப்பர் கப் சங்க செயலாளர் சண்முக சுந்தரம், கிருஷ்ணகிரி அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்புத் தலைவர் சய்யத் இர்ஃபான் உல்லா, தெலுங்கு சங்கத் தலைவர் மனோகர், சேலம் வெள்ளி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் உதய குமார், கட்டுமான உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மோகன்.

மண்பாண்ட உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா, கள்ளக்குறிச்சி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் சுப்பராயலு, மரம், ஓடு வியாபாரிகள் சங்கத் தலைவர் சீனிவாசன், சேலம் நெடுஞ்சாலை சங்கம், மாநில லாரி உரிமையாளர் சங்கம், ஜவுளி சங்கம், சேலம், ரோட்டரி கிளப், நுகர்வோர் பொருட்கள் விநியோக சங்கம், நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம், சின்ன சேலம் அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்கம், சேலம் இரும்பு எஃகு சங்கம், பர்கூர் ஜவுளி வியாபாரிகள் சங்கம், சேலம் மாவட்ட பால் உரிமையாளர்கள் சங்கம், சேலம் நகர வர்த்தக சபை, சேலம் மாவட்ட ஓட்டல் சங்கம், சேலம் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட “அன்பு செய்வோம்” அறக்கட்டளை தலைவர் செ.கௌரி ஆகியோர் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, இந்தியா கூட்டணி சேலம் திமுக வேட்பாளரும்- மாவட்ட செயலாளருமான டி.எம்.செல்வகணபதி, மாவட்டச் செயலாளர்கள் இரா.ராஜேந்திரன், எஸ்.ஆர்.சிவலிங்கம், பி.பழனியப்பன், தடங்கம் பெ.சுப்ரமணி, ஒய்.பிரகாஷ், தே.மதியழகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.

* நீண்ட போராட்டத்திற்கு பின் பானை சின்னம் கிடைத்துள்ளது: திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு இடங்களிலும் தங்களுக்கு பானை சின்னம் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு எங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரால் பானை சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை வழங்காமல் தொடர்ந்து நிராகரித்து வருவது சங்பரிவார் அமைப்புகளின் கட்சி அலுவலகமாக தேர்தல் ஆணையம் செயல்படுவது போன்ற நிலையை உருவாக்கியுள்ளது. பானை சின்னத்தை கேட்டு நாங்கள் தொடர்ந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் 2ம் தேதி விசாரணைக்கு வரும்போது மற்ற மாநிலங்களிலும் விசிக வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு பல்வேறு சங்கங்கள், முக்கிய அமைப்புகள், பிரமுகர்கள் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu ,M. K. Stalin ,Salem, ,Tamil Nadu Federation of Merchants Association ,Salem ,District ,President ,Periyasamy ,Tuluva Velalar Sangh ,
× RELATED கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா:...