×

6 பன்னீர்செல்வங்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்ட வாளி சின்னத்திற்கு பதில் பலாப்பழமும், மற்ற 5 பன்னீர் செல்வங்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, பாஜ கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாகவும், அதிமுக வேட்பாளராக ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் சந்திரபிரபா மற்றும் ஒ.பன்னீர்செல்வம் என்ற பெயருடைய 4 பேரும், எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 25 பேர் போட்டியிடுகின்றனர்.

இதனையடுத்து நேற்று மாலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் 25 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் அதிகாரபூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சுயேட்சைக்களுக்கு போட்டி இல்லாதவர்களுக்கு விருப்பப்படி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு வாளி சின்னம் கோரியிருந்தார். வாளி சின்னத்தை மற்றொரு ஒ.பன்னீர்செல்வமும் கேட்டதால் குலுக்கல் முறையில் வேட்பாளர்கள் முன்னிலையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், மதுரை சோலைஅழகுபுரத்தை சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கும் குலுக்கல் போடப்பட்டது. இதில், மாஜி முதல்வர் ஓபிஎஸ்க்கு பலாப்பழம், சோலைஅழகுபுரம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திராட்சை கொத்தும் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு வாளி சின்னம், ராமநாதபுரம் தெற்குகாட்டூரை சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு கண்ணாடி டம்ளர் சின்னம், உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டியை சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு கரும்பு விவசாயி சின்னம், பரமக்குடியை சேர்ந்த எம்.பன்னீர்செல்வத்திற்கு பட்டாணி சின்னம் போட்டியின்றி ஒதுக்கப்பட்டது.
இறுதியாக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளது. வேலூரியில் சுயேட்சயைாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post 6 பன்னீர்செல்வங்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Chief Minister ,O. Panneerselvam ,Ramanathapuram Lok Sabha ,Panneerselvams ,Indian Muslim League ,Lok Sabha ,DMK ,
× RELATED ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் அரசு...