×

காவல் துறை அதிகாரியாக அண்ணாமலை என்ன செய்தார்? ஆர்டிஐ-யில் விவரம் கேட்டு ஆர்வலர் மனு

பெங்களூரு: கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜ தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, பெங்களூரு தெற்கு காவல் துறை துணை ஆணையராக பணியாற்றியபோது, அவர் பணியாற்றிய விதம் குறித்து அறிந்துகொள்ள அவர் சார்ந்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கேட்டிருக்கிறார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடுகிறார். ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கர்நாடகாவில் பெங்களூரு, உடுப்பி, மங்களூரு ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார். காவல் துறையில் பணியாற்றியபோது, அண்ணாமலையின் செயல்பாடுகளை பற்றி தெரிந்துகொள்ளும் வகையில், ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, பெங்களூரு தெற்கு துணை ஆணையராக அண்ணாமலை பணியாற்றிய விதம் குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டிருக்கிறார்.

அதில், அவர் எவ்வளவு காலம் பெங்களூருவில் பணியாற்றினார், எத்தனை நாட்கள் விடுப்பு எடுத்தார், அவரை பார்க்க வந்தவர்கள் எத்தனை பேர் மற்றும் யார் யார், எத்தனை வழக்குகள் பதிவு செய்தார்கள். பெங்களூருவில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் எத்தனை ஆலோசனை கூட்டங்கள் நடத்தினார், அவரது கட்டுப்பாட்டில் இருந்த காவல் நிலையங்களை எத்தனை முறை பார்வையிட்டார், எத்தனை கொடூரமான வழக்குகளை பதிவு செய்தார், ரவுடிகளுக்கு எதிராக எத்தனை வழக்குகளை பதிவு செய்தார் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கேட்டிருக்கிறார்.

The post காவல் துறை அதிகாரியாக அண்ணாமலை என்ன செய்தார்? ஆர்டிஐ-யில் விவரம் கேட்டு ஆர்வலர் மனு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Bengaluru ,BJP Tamil ,Nadu ,president ,Coimbatore Lok Sabha ,Commissioner ,Bengaluru South Police Department ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...