×

பா.ஜ சார்பில் போட்டியிட ரேபரேலியில் வாய்ப்பு: நிராகரித்த வருண்காந்தி


புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் தொகுதி பா.ஜ எம்பி வருண்காந்தி. இவர் ராகுல்காந்தி, பிரியங்காவின் சகோதரர். அதாவது ராஜிவ்காந்தியின் சகோதரர் சஞ்சய்காந்தியின் மகன். இந்த ேதர்தலில் பிலிபித் தொகுதியில் வருண்காந்திக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அவருக்கு பதில் ஜிதின் பிரசாத் நிறுத்தப்பட்டுள்ளார். பிலிபித் தொகுதிக்கு பதில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுமாறு பா.ஜ சார்பில் வலியுறுத்தப்பட்டது. அங்கு ராகுல் அல்லது பிரியங்கா போட்டியிட வாய்ப்பு உள்ளதால் ஒருவாரமாக பா.ஜவின் வாய்ப்பை பரிசீலித்த வருண்காந்தி அதை நிராகரித்து விட்டது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது தனது சகோதரர் ராகுல் அல்லது சகோதரி பிரியங்காவை எதிர்த்து தேர்தலில் நிற்க தான் தயார் இல்லை என்பதை அவர் இதன் மூலம் பா.ஜ தலைமைக்கு உணர்த்தி உள்ளார். இதுகுறித்து பாஜவின் உ.பி., துணைத் தலைவர் விஜய் பகதூர் பதக், ‘எனக்கு எதுவும் தெரியாது. எப்படியும் பேசுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. பாஜ செய்தித் தொடர்பாளர்களிடம் கேளுங்கள்’ என்றார். 1984 தேர்தலில் ராஜிவ் காந்திக்கு எதிராக வருண்காந்தியின் தாயார் மேனகா காந்தி அங்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது வருண்காந்தி அங்கு போட்டியிட மறுத்து விட்டார். வருணின் தாயார் மேனகா காந்தி சுல்தான்பூரில் பா.ஜ சார்பில் போட்டியிடுகிறார்.

The post பா.ஜ சார்பில் போட்டியிட ரேபரேலியில் வாய்ப்பு: நிராகரித்த வருண்காந்தி appeared first on Dinakaran.

Tags : Varun Gandhi ,Raebareli ,BJP ,New Delhi ,Bharatiya Janata Party ,Philipith Constituency ,Uttar Pradesh ,Rahul Gandhi ,Priyanka ,Rajiv Gandhi ,Sanjay Gandhi ,Philippith ,Jidin Prasad ,Philibith… ,Rae Bareli ,Dinakaran ,
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிக்கு நிர்வாகிகள் நியமனம்