×

ஒன்றிய அமைச்சருக்கு கர்நாடகாவில் சீட் மறுப்பு

புதுடெல்லி: ஒன்றிய இணை அமைச்சர் நாராயணசாமிக்கு கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா தொகுதியில் பா.ஜ சீட் வழங்க மறுத்து விட்டது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா தொகுதியில் எம்பியாக இருக்கும் ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமிக்கு சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதில் கர்நாடகா முன்னாள் துணைமுதல்வர் கோவிந்த் கர்ஜாலுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் சுயேட்சை எம்பியாக இருந்த நவ்னீத் ரானாவுக்கு பா.ஜ சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் மாஜி முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்ததால் காலியாக அறிவிக்கப்பட்ட கர்னல் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் புதிய முதல்வர் நயாப்சிங் சயானி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

The post ஒன்றிய அமைச்சருக்கு கர்நாடகாவில் சீட் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Union minister ,Karnataka ,New Delhi ,Union Minister of State ,Narayanasamy ,BJP ,Chitradurga ,Lok Sabha elections ,Union ,minister ,Dinakaran ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...