×

சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய அமைச்சர் திருவனந்தபுரம் பாஜ வேட்பாளர் வேட்பு மனுவை தள்ளுபடி கோரி வழக்கு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜ கூட்டணி வேட்பாளராக ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இந்நிலையில் ராஜீவ் சந்திரசேகரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பது: ராஜீவ் சந்திரசேகர் வேட்பு மனுவுடன் தன்னுடைய சொத்து விவரங்கள் முழுவதையும் குறிப்பிடவில்லை.
இது தொடர்பாக புகார் அளித்தும் திருவனந்தபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜீவ் சந்திரசேகரின் மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார். இது சட்டவிரோதமாகும். எனவே இந்த மனு மீது 2 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய அமைச்சர் திருவனந்தபுரம் பாஜ வேட்பாளர் வேட்பு மனுவை தள்ளுபடி கோரி வழக்கு appeared first on Dinakaran.

Tags : Union Minister Thiruvananthapuram ,BJP ,Thiruvananthapuram ,Union Minister of State ,Rajeev Chandrasekhar ,Kerala High Court ,Rajiv Chandrasekhar ,Union Minister ,Dinakaran ,
× RELATED சசி தரூர் மீது போலீஸ் வழக்கு