×

20 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை; கழிவரை கூட இல்லாத வீட்டில் வசிக்கிறோம்: மும்பை வாழ்வாதாரத்தை மேம்படுத்த தாராவி மக்கள் கோரிக்கை

மும்பை: டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் வாழும் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்பதே ஆட்சிக்கு வருபவர்களிடம் தங்கள் எதிர்பார்ப்பு என தெரிவித்துள்ளனர். மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள தாராவி, சியோன் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர். பல தொழில்களில் ஈடுபட்டு வரும் அந்த மக்கள் கடந்த ஆண்டுகளில் காட்சிகளில் இருந்தவர்கள் தங்கள் பகுதிகளுக்கு பெரிதாக நலத்திட்டங்களை கொண்டு வரவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக 20 ஆண்டுகளாக எந்த முன்னேற்றத்தையும் தாராவி பகுதி மக்கள் பெறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். தென்னிந்தியர்கள் வாழும் பகுதிகளை ஸ்திரபு பொருளாதார மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் அதனால் தங்களது தொழில் வளர்ச்சியடையும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கழிவறைகள் கூட இல்லாமல் பலர் வசித்த வருவதாகவும. அடிப்படை வசதிகளை அனைவரும் பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும் அங்குள்ள தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதே போல டெல்லியில் வசந்த் விகார், இன்தேர்ப்போர் உள்ளிட்ட பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறைந்த ஊதியம் பெரும் வேலையில் பலர் ஈடுபட்டு வரும் நிலையில் தங்களது ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். தாங்கள் வசிக்கும் பகுதியில் சாலைகள் சரியாக இல்லை என்றும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது வாழ்கை தரத்தை மேம்படுத்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவும் வெளி மாநிலங்களில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கோரிக்கை வைத்தனர்.

The post 20 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை; கழிவரை கூட இல்லாத வீட்டில் வசிக்கிறோம்: மும்பை வாழ்வாதாரத்தை மேம்படுத்த தாராவி மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Delhi ,Tamils ,Dharavi ,Sion ,Maratha ,
× RELATED ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன்...