×

ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே முக்கியம்: கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா ஆவேசம்


ஷிவமொக்கா: மக்களவை தேர்தலில் ஹாவேரி தொகுதியில் தனது மகனுக்கு சீட் வழங்க வேண்டும் என்று கர்நாடக முன்னாள் துணைமுதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, பாஜ தலைமையிடம் வலியுறுத்தினார். ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்காமல் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு சீட் வழங்கப்பட்டது. இதற்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி வரும் ஷிவமொக்கா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையில் பாஜ தலைமை மீது கடும் கோபத்தில் உள்ள ஈஸ்வரப்பாவை சமாதானம் செய்யும் வகையில் ஈஸ்வரப்பாவை ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராகவும் அவரது மகன் காந்தேஷை சட்டமேலவை உறுப்பினராக நியமனம் செய்வதாக உறுதியளித்தது. ஆனால் ஈஸ்வரப்பா. எனக்கு ஆளுநர் பதவியை காட்டிலும் எனது சுயமரியாதை தான் முக்கியம். எனது கவுரவத்தை சோதித்து பார்க்க விரும்புவோருக்கு நான் யார் என்பதை எடுத்து காட்ட கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்துவேன். ஆளுநர் பதவி காட்டி என்னை ஏமாற்றும் முயற்சிக்கு நான் பணிய மாட்டேன் என்றார்.

The post ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே முக்கியம்: கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,deputy chief minister ,KS Eshwarappa ,Shivamogga ,Former ,BJP ,Haveri ,Lok Sabha ,Chief Minister ,Basavaraj Pomi ,KS Eswarappa ,
× RELATED ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு...