×

ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

 

கிருஷ்ணகிரி, மார்ச் 13: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 56 ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொது விநியோக திட்டத்தை சிறப்பாக நடத்தும் பொருட்டு, கூட்டுறவுத்துறை கட்டுப் பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளை ஆய்வு செய்ய மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தலைமையில் துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) குமார், கிருஷ்ணகிரி சரக துணைப்பதிவாளர் பாலமுருகன், 16 கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் 2 முதுநிலை ஆய்வாளர்கள் ஆகியோரை கொண்டு பறக்கும் படை ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டது.இக்குழுவினால் 26.02.2024 அன்று கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 56 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில் தவறிழைத்த கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது பொது விநியோகத்திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திட பொது விநியோகத்திட்ட பணியாளர்களுக்கும், சங்க நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்