- ஜகன் மோகன்
- தெலுங்கு தேசம்
- Janasena
- திருமலா
- ஆந்திர முதலமைச்சர்
- கீதாஞ்சலி
- டெனாலி, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
திருமலை: ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் வீடு கொடுத்ததாக கூறிய தன்னை சமூக வலைதளத்தில் இழிவுபடுத்தி தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினர் ட்ரோல் செய்ததால் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்தவர் கீதாஞ்சலி. இவருக்கு சில நாட்கள் முன்பு ஜெகனன்னா காலனியில் வீடு ஒதுக்கப்பட்டது, அம்மாஒடி திட்டத்தால் எனது பிள்ளைகளுக்கான கல்விக்கடன் கிடைத்தது என்று கீதாஞ்சலி மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்தார். இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில் வீட்டுச் சான்றிதழைக் கொடுத்தால், அதை மடித்து வையுங்கள், மைக்கில் கத்த வேண்டாம்.
ஜெகன் வீட்டு மனை பட்டா கொடுத்தால் வாங்கி வீட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள், வெளியே வந்து கத்த வேண்டாம் என்று கீதாஞ்சலி குறித்து தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனாவின் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்ய தொடங்கியதால் இதுகுறித்து தாங்க முடியாமல் விரக்தி அடைந்த கீதாஞ்சலி கடந்த 7ம் தேதி ஜென்மபூமி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் பலத்த காயமடைந்த கீதாஞ்சலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கு தெலுங்கு தேசம், ஜனசேனாதான் காரணம் என்று ஒய்எஸ்ஆர் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
The post சமூக வலைதளத்தில் இழிவுபடுத்தி ட்ரோல் செய்ததால் ஜெகன்மோகன் வீடு கொடுத்ததாக பேசிய பெண் தற்கொலை: தெலுங்கு தேசம், ஜனசேனா மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran.