×
Saravana Stores

கொச்சியில் இருந்து மூணாறுக்கு இன்று பறக்குது ‘கடல் விமானம்’

மூணாறு: கேரள மாநிலம் மூணாறு ‘தென்னகத்து காஷ்மீர்’ என வர்ணிக்கப்படுகிறது. இங்கு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாநில விமான நிலைய மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கடல் விமான போக்குவரத்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நீரிலும், வானிலும் செல்லத்தக்க வகையில் கடல் விமானம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொச்சி – மூணாறு மாட்டுப்பட்டி அணை இடையே கடல் விமான சேவை துவங்குவதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது. கொச்சியில் அரசு வசம் உள்ள போல்ஹாட்டி பேலஸ் பகுதி கடலில் இருந்து மூணாறு அருகில் உள்ள மாட்டுப்பட்டி அணைக்கு விமானம் இயக்கப்படுகிறது.

கொச்சி கடலில் இருந்து கிளம்பி, இன்று காலை 11 மணியளவில் மாட்டுப்பட்டி அணையில் கடல் விமானம் இறங்குகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மின்சார துறை, சுற்றுலா துறை மற்றும் வனத்துறையின் சார்பில் செய்யப்பட்டுள்ளன. எட்டு இருக்கைகளை கொண்ட இந்த விமானத்தில் சாதாரண விமானங்களை விட ஜன்னல்கள் பெரிதாக இருக்கும் என்பதால் வானில் பறந்தவாறு மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அழகை கண்டு ரசிக்கலாம்.

The post கொச்சியில் இருந்து மூணாறுக்கு இன்று பறக்குது ‘கடல் விமானம்’ appeared first on Dinakaran.

Tags : Kochi ,Munnar ,Kerala ,Kashmir of the South ,State Airport Development Corporation ,State Tourism Development Corporation ,
× RELATED மூணாறு மலைச்சாலையில் ஆபத்தான முறையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள்