×
Saravana Stores

அரசியலமைப்பு புத்தகம் வெற்று காகிதம் இல்லை மோடியை தொடக்க பள்ளிக்கு அனுப்ப வேண்டும்: காங்கிரஸ் தலைவர் கார்கே சாடல்

மும்பை: பிரதமர் மோடியை மீண்டும் தொடக்க பள்ளிக்குதான் அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக சாடி உள்ளார். மகாராஷ்டிரா பேரவை தேர்தலையொட்டி எதிர்க்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை வௌியிட்டு பேசிய கார்கே பாஜவை கடுமையாக சாடி உள்ளார். கார்கே பேசியதாவது, “ராகுல் காந்தியின் கையில் இருப்பது அரசியலமைப்பு புத்தகம் இல்லை.

அது வெற்று புத்தகம், நகர்ப்புற நக்சல்கள் புத்தகம், மார்க்சிஸ்ட் இயக்கத்தின் புத்தகம் என பிரதமர் மோடியும், பாஜ தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் கடந்த 2017ம் ஆண்டு இதேபோன்ற ஒரு புத்தகத்தின் நகலை பிரதமர் மோடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கொடுத்தார். அந்த அரசியலமைப்பு சிவப்பு புத்தகம் வெறும் குறிப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது முழுமையான அரசியலமைப்பு புத்தகம் இல்லை.

பாஜ தலைவர்களும், பிரதமர் மோடியும் சித்தரிப்பதுபோல அரசியலமைப்பு புத்தகம் வெற்று காகிதம் இல்லை. மோடியை மீண்டும் தொடக்க பள்ளியில்தான் சேர்க்க வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய கார்கே, “காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்களை பிரிக்க பார்ப்பதாக பாஜ சொல்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மக்களை பிரிப்பதற்கு இல்லை. பல்வேறு சமூகங்களின் தற்போதைய நிலையை தெரிந்து கொண்டு அவர்களுக்கான நன்மைகளை அதிகரிக்கவே சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் வலியுறுத்துகிறது” என்று கூறினார்.

The post அரசியலமைப்பு புத்தகம் வெற்று காகிதம் இல்லை மோடியை தொடக்க பள்ளிக்கு அனுப்ப வேண்டும்: காங்கிரஸ் தலைவர் கார்கே சாடல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,Karke Chatal ,Mumbai ,Kharge ,Maha Vikas Alliance ,Kharke ,BJP ,Maharashtra assembly elections ,
× RELATED பிரதமர் மோடிக்கு ஊழல் பற்றி பேச அருகதை...