×

தேனி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள்: சேர்மன் வழங்கினார்

 

தேனி, மார்ச் 6: தேனி அல்லிநகரம் நகராட்சியில் 140 தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் வழங்கினர். தேனி – அல்லிநகரம் நகராட்சியில் சுகாதாரத்துறை மூலம் தனியார் நிறுவனத்திற்கு தூய்மைப் பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் தனியார் நிறுவனம் மூலம் 140 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சீருடை மற்றும் கையுறை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, நகராட்சி மருத்துவசுகாதார அலுவலர் கவிப்பிரியா மற்றும் சுகாதார அலுவலர் அறிவிச்செல்வம் முன்னிலை வகித்தனர். தனியார் துப்புரவு ஒப்பந்த நிறுவன மாவட்ட மேலாளர் உமர் வரவேற்றார். நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு, பணியின் போது கட்டாயம் சீருடை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

The post தேனி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள்: சேர்மன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Theni Municipality ,Theni ,Commissioner ,Theni Allinagaram Municipality ,Allinagaram municipality ,Dinakaran ,
× RELATED தேனி கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!