×

ஒன்றிய அரசு வரியை கூடுதலாக வாங்கிவிட்டு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் பாரபட்சம் ராமதாசுக்கு கோபம் வந்துடுச்சு…

 

திண்டிவனம்: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை. இதனால் அதிகமாக வரி செலுத்தும் தமிழ்நாட்டுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி லாபம் எடுத்திருக்க வேண்டும். ரூ.3.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இடஒதுக்கீடு பெற பாமகவும், வன்னியர் சங்கமும் எந்தவித தியாகத்திற்கும் தயாராக உள்ளது. பெரிய போராட்டத்திற்கு தயாராகி வருகிறது. இதுகுறித்து முடிவெடுக்க பாமக, வன்னியர் சங்க கூட்டு கூட்டம் அடுத்த மாதம் முதல்வாரத்தில் நடைபெற உள்ளது. அப்போது போராட்ட தேதி முறைப்படி அறிவிக்கப்படும்.

தற்போது மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த 3 நாட்களில் மேட்டூர் அணை நிரம்பும். 1.5 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. காவிரி தண்ணீர் திறந்தால் குருவை பயிருக்கு பயனுள்ளதாக இருக்கும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியில் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.

எனவே கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5000 வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு தேர்வு நடைபெற்று வருகிறது. இக்குழுவில் அனைத்து சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்றால் பணியை முடக்கி போடாமல் போதிய நிதி ஒதுக்கி குறிப்பிட்ட காலத்தில் அப்பணிகள் முடிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டுக்கு தேவையான அவசியமான, அத்தியாவசியமான வேலைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

உரிய நிதி ஒதுக்க வேண்டுமென ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன். பட்ஜெட்டில் நிறைய பிரச்னைகள் உள்ளது. வரி நாம் கூடுதலாக கொடுத்திருக்கிறோம். வரி குறைவாக செலுத்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். இப்படியான பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பாரபட்சம் இல்லாமல் நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசு வரியை கூடுதலாக வாங்கிவிட்டு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் பாரபட்சம் ராமதாசுக்கு கோபம் வந்துடுச்சு… appeared first on Dinakaran.

Tags : Ramadas ,union government ,Tamil Nadu ,Union Budget ,Ramadoss ,BAMA ,Ramadass ,Dinakaran ,
× RELATED திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!!