×

70 லட்சம் மதிப்பில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

 

திண்டிவனம், ஜூலை 27: திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் ஏரிகரை அருகே உள்ள சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ் உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகப்படும்படியாக அந்த வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, மினி லாரியில் உள் அறை அமைத்து 25 கிலோ பாக்கெட்டுகளில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 258 கிலோ கஞ்சா கடத்தி வருவது தெரிய வந்தது.

இதையடுத்து கஞ்சாவையும், வேனையும் பறிமுதல் செய்த போலீசார் அதில் வந்த கேரள மாநிலம், பெரிய கேரளா காசர்கோடு பகுதியைச் சேர்ந்த சலாம் மகன் ஆசிப் (26), கேரள மாநிலம் காசர்கோடு பானத்தூர் தாமோதரன் மகன் உதயகுமார் (44) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த தாழனூர், ஆவடியார்கோவில் தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் முத்து (40), கேரளா மாநிலம் பெரிய கேரளா, மூலக்கடவு ரோடு பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் மகன் சலாம் (51) உட்பட 4 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், கிழக்குத்து தாலுகா, பூலக்குழி பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் பிஜேஷ் (48) என்பவரை கைது செய்தனர். கஞ்சா கடத்தல் வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

The post 70 லட்சம் மதிப்பில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Dindivanam ,Deputy Superintendent of Police ,Suresh Pandian ,District Superintendent of Police ,Deepak Sivaj ,Chennai-Trichy National Highway ,Erikari ,
× RELATED திண்டிவனம் அரசு கல்லூரி முதல்வரை கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணா