×

கட்டிட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், மார்ச் 1: தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுட்டனர்.மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமை வகித்தார். தலைவர் கவிதா, பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன், ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர். கட்டுமான தொழிலாளர் ஒன்றிய சட்டங்களை கலைக்கக்கூடாது. முறையாக செயல்படுத்த வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த நல வரி 5 சதவீதம் வசூல் செய்ய வேண்டும். ஐ.நா.சபை உலக தொழிலாளர் அமைப்பு வழிகாட்டுதல்படி கட்டுமான தொழிலாளர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்க வேண்டும். நலவாரியம் மூலமாக மருத்துவ இஎஸ்ஐ வசதி, காப்பீடு, பி.எப். பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு 55வயது ஆண்களுக்கு 60வயது நிறைவடைந்த தேதியிலிருந்து ஓய்வூதியம் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

The post கட்டிட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu ,AITUC ,Fort Maidan ,District Secretary ,Munusamy ,President ,Kavitha ,Treasurer Palaniswami ,CBI District ,Secretary… ,Construction ,Workers Union ,Dinakaran ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...