×

ஊழலுக்காகவே பிறந்தவர் எடப்பாடி: சிவகங்கையில் டிடிவி.தினகரன் பேச்சு

சிவகங்கை: ஊழலுக்காகவே பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று சிவகங்கையில் டிடிவி.தினகரன் பேசினார். சிவகங்கையில் அமமுக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது: ஜெயலலிதாவின் ஆட்சியை பழனிசாமி கொண்டு செல்வார் என நாம் நினைத்த நிலையில், ‘நான் துரோகம் செய்பவன்’ என காட்டியவருக்கு எதிராக துவங்கப்பட்டதே இந்த இயக்கம். நான் சினிமா நடிகர் கிடையாது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன். சில காரணங்களால் அரசியலை விட்டே 9 ஆண்டு காலம் ஒதுங்கி நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எடப்பாடி என்னை பார்த்து, ‘தினகரன் ஒரு பொருட்டல்ல’ என்று கூறுகிறார். நான் நிற்கவில்லை என்றும் என்னை நம்பி வரும் 40 பேருக்கு சீட் தாருங்கள் என கூறினேன்.

அன்றைக்கு ஓ.பன்னீர்செல்வம்கூட கூட்டணி அமைக்க வேண்டும் என்றார். ஆனால் தவழ்ந்து தவழ்ந்து வந்த பழனிசாமி, ஊழலுக்காகவே பிறந்த பழனிசாமி, அதனை கேட்கவில்லை. அதனால் அவர் ஆட்சி பொறுப்பிற்கு வர முடியவில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்தும் சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வி தான் கிடைத்தது. கெடுவான், கேடு நினைப்பான், உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான். பன்னீர்செல்வத்திற்கு துரோகம், எல்லாவற்றை காட்டிலும் நான்கரை ஆண்டுகள் ஆட்சியை காப்பாற்றி கொடுத்து சின்னத்தை பெற்றுக் கொடுத்தவர்களுக்கும் துரோகம் செய்தார். இந்த தேர்தலில் துரோகிகளை ஒழிப்பதே உங்கள் வேலை.

The post ஊழலுக்காகவே பிறந்தவர் எடப்பாடி: சிவகங்கையில் டிடிவி.தினகரன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,DTV.Thinakaran ,Sivagangai ,TTV Dinakaran ,Edappadi Palaniswami ,AMU ,general secretary ,TTV ,Dinakaran ,Palaniswami ,Jayalalithaa ,DTV ,
× RELATED என்னை பச்சோந்தி என்ற எடப்பாடி பச்சை...