×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கிருஷ்ணகிரி, பிப்.23: கிருஷ்ணகிரி கலால் எஸ்எஸ்ஐ மணிமேகலை மற்றும் போலீசார் காவேரிப்பட்டணம் தென்பெண்ணையாறு மேம்பால பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் மேல்மக்கான் தெருவை சேர்ந்த அம்ஜத் பாஷா(35) என்பதும், அவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ₹1000 மதிப்பிலான 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,SSI ,Manimegala ,Cauverypatnam South Pennayaur ,Amjat Pasha ,Melmakan Street ,
× RELATED அரசு ஊழியர்களின் சொத்து, கடன் குறித்த...