×

மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு

போச்சம்பள்ளி, மார்ச் 18: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். அந்த வகையில் பர்கூர் போலீஸ் டிஎஸ்பி தனசேகர் தலைமையில், போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் உள்பட இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் தலைமையில் வந்த, 64 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து, கொடமாண்டப்பட்டி சந்திப்பு சாலையிலிருந்து, பஸ் நிலையம் மற்றும் நான்குவழிச்சாலை வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இப்பேரணியில் போச்சம்பள்ளி போலீசார் உளவுத்துறை தலைமை காவலர் ஆனந்தராஜ், உளவுத்துறை காவலர் மூர்த்தி மற்றும் ஆயுதப்படை போலீசார் உள்பட, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Central Security Forces ,Pochampally ,Tamil Nadu Assembly ,Central Industrial Security Force ,Election Commission ,Bargur Police ,DSP ,Dhanasekar… ,
× RELATED 2 இடங்களில் ரூ.44.7 லட்சம் பறிமுதல்