×

விக்கிரமங்கலம் அருகே மயானத்தில் இறந்து கிடந்த முதியவர்

தா.பழூர்:அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (75). விவசாயியான இவர் தனக்கு அடிக்கடி நெஞ்சு வலிப்பதாக தனது குடும்பத்தினரிடம் கூறிவந்துள்ளார் .இந்நிலையில் தனது வீட்டில் இருந்து குணமங்கலம் -முத்துவாஞ்சேரி சாலை ஓரம் உள்ள சுடுகாட்டு பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்பு அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ராஜமாணிக்கம் இறந்து கிடந்துள்ளார். இதனை அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் கண்டு விக்கிரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் ராஜமாணிக்கத்தின் மகன் ராவணன் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் வழக்கு பதிவு செய்து ராஜமாணிக்கம் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post விக்கிரமங்கலம் அருகே மயானத்தில் இறந்து கிடந்த முதியவர் appeared first on Dinakaran.

Tags : Vikramangalam ,Bhaur ,Rajamanickam ,Gunamangalam Colony Street ,Vikramangalam, Ariyalur District ,Gunamangalam-Muthuvancheri road ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...