கோவை: கோவை பீளமேடு புர்கானி காலனியை சேர்ந்தவர் சபீர் தைவாக் (65). இவர் அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 6ம் தேதி இரவில் இவர் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இவர் வீட்டில் இவரின் தாய் சைத்தூன் (85), மனைவி அஸ்மா (59), பேத்திகள் உசைனா (14), பாரூல் (11) ஆகியோரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் கதவை உடைத்து 4 பேர் முகமூடி அணிந்து வீட்டிற்குள் புகுந்தனர். அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி கட்டி போட்டனர். அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணி வைத்து அடைத்தனர். பின்னர் வீட்டிலிருந்த 10 லட்ச ரூபாய் மற்றும் 35 பவுன் தங்க வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். 4 பேரும் இந்தியில் பேசியதாக தெரிகிறது.
The post ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு ரூ.10 லட்சம், 35 பவுன் நகை பறிப்பு முகமூடி கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் மாயம் appeared first on Dinakaran.