×

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

 

திருப்பூர், பிப்.18: திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நேற்று திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. சப் கலெக்டர் சௌமியா ஆனந்த் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வசந்தி வரவேற்றார். வேலைவாய்ப்பு முகாமில் 104 நிறுவனங்கள் சார்பில் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில், 1241 பேர் கலந்து கொண்டனர். இதில், 300 பேர் வேலைக்கு தேர்வாகினர். தொடர்ந்து மேயர் தினேஷ்குமார் கலந்துகொண்டு பணி நியமான ஆணைகளை வழங்கினார். இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.

The post தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tiruppur Kumaran Women's College ,Tiruppur District Administration ,District Employment and Vocational Guidance Centre ,Saumia Anand ,Dinakaran ,
× RELATED பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4...