×

கலெக்டர் அலுவலகத்தில் வங்கியை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்

 

திருப்பூர், ஜூலை 25: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கனரா வங்கியில் விவசாயம் மேம்பாட்டிற்காக அசல் ஆவணங்களை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். கடனை ஒருமுறை செலுத்தும் ஓடிஎஸ் முறையில் திருப்பி செலுத்திய பின்பும் அடமானத்தை ரத்து செய்யாமலும், விவசாயிகளுடைய அசல் ஆவணத்தை திருப்பி தராமல் ஓராண்டு காலமாக அலைக்கழித்து வருகிறது. இதேபோல், அணைக்கடவு கிளை கனரா வங்கியில் கடன் பெறுவதற்காக அணுகும் விவசாயிகளை இன்சூரன்ஸ் எடுத்தால் மட்டுமே கடன் வழங்கப்படும் என வலியுறுத்துகின்றனர்.

இதுபோன்று விவசாயிகள் கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்திருந்தனர். அதன்படி, நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பின்புறம் நுழைவுவாயிலில் உள்ள மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வங்கி அலுவலர்களுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து வங்கி அலுவலர்களுடன் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் ஒரு வார காலத்திற்குள் பாதிப்படைந்த விவசாயிகளுக்கான சொத்து பத்திரத்தை திருப்பித் தர உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்ற கட்டாயப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கை நிவர்த்தி செய்வதாக உறுதி அளிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக காத்திருப்பு போராட்டத்தை ஒத்தி வைத்தனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநகர செயலாளர் ரமேஷ், ஏபிடி மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர். பொது மக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி சீரான முறையில் குடிநீர் வழங்குவது குறித்து அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து விரைவாக செயல்பட வேண்டும்.

The post கலெக்டர் அலுவலகத்தில் வங்கியை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Udumalai ,Canara Bank ,ODS ,Dinakaran ,
× RELATED கனரா வங்கி, மற்றும் தோழி நாளிதழ்...