×

ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சியில் ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசனிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தாலுகா சர்வேயர் பிரகாஷை அப்பகுதியில் அளவீடு செய்ய தாசில்தார் உத்தரவிட்டார். அளவீடு செய்தபோது ஓடை என கிராம கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தில் சுப்புராயன் மகன் வையாபுரி என்பவர் 0.06 சென்ட் நிலத்தை உழவடை செய்தும், சின்னுசெட்டி மகன் ஆறுமுகம் 0.09 சென்ட் நிலத்தை உழவடை செய்தும், சின்னுசெட்டி மகன் முருகன் 0.05 சென்ட் நிலத்தை உழவடை செய்தும் ஆக்கிரமித்தது தெரியவந்தது. இதையடுத்து, வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

The post ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Tahsildar Venkatesan ,Thedaur Municipality ,Tahsildar ,Taluk Surveyor ,Prakash ,Dinakaran ,
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு