×

மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

சேலம், பிப்.13: குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட கேட்டு மக்கள் மனுக்களை அளித்தனர். மொத்தமாக 397 மனுக்கள் பெறப்பட்டது.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் தரை தளத்தில் நடந்த முகாமில் கலெக்டர் பிருந்தாதேவி கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றார். அதில், உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 17 மனுக்கள் அளிக்கபப்ட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர், ஒரு மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல்கள்களையும் கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) மயில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Salem ,Collector ,Brindadevi ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்