×

காளியம்மன், மாரியம்மன் கோயில் தீ மிதி விழா

இடைப்பாடி, பிப்.10: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே பூலாம்பட்டி பேரூராட்சியில், குப்பனூர் காளியம்மன், மாரியம்மன் கோயில் விழா கடந்த 17ம் தேதி பூ சாற்றுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜை -அலங்காரங்கள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை தீமிதி விழா நடந்தது. முன்னதாக பூசாரி மற்றும் காணியாசிக்காரர்கள் தீ மிதித்தனர். தொடர்ந்து ஆண்-பெண்கள் தீச்சட்டி ஏந்தி, அலகு குத்தியபடி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து பொங்கல் வைத்தும், ஆடு -கோழி பலியிட்டும் அம்மனை வழிபட்டனர்.

The post காளியம்மன், மாரியம்மன் கோயில் தீ மிதி விழா appeared first on Dinakaran.

Tags : Kaliyamman ,Mariyamman temple ,Ethapadi ,Kuppanur Kaliamman and Mariyamman temple festival ,Poolampatti ,Salem district ,Dimithi ,Kaliyamman, Mariyamman Temple Dimithi Festival ,Dinakaran ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு