×

பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கஞ்சா விற்ற தம்பதி உள்பட 4 பேர் கைது

திருச்சி, பிப்.8: திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு இரண்டு பேர் நின்று கொண்டு இருந்தனர். அந்த 2 பேரும் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தபோது திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த சிவகுமார் (25), இவரது மனைவி சத்யா (21) ஆகியோர் என தெரியவந்தது. இவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இருவரும் அந்த பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 2,200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து வாகனம் மற்றும் ₹.90 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று திருச்சி பாலக்கரை மணல்வாரி துறை ரோடு பகுதியில் கஞ்சா விட்டுக் கொண்டிருந்த சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (54), சேட்டு (30) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கஞ்சா விற்ற தம்பதி உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy Criminal Court ,Trichy ,Gandhi Market ,Trichy-Chennai ,
× RELATED சூதாடிய 8 பேர் கைது