×

வழிவாய்க்கால் காளியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

சேலம், பிப்.8: சேலம் தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன் கோயிலில், தை பெருவிழாவையொட்டி நேற்று நூற்றுக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் தாதகாப்பட்டியில் வழிவாய்க்கால் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் அம்மனுக்கு திருவிழா எடுக்கப்படும். நடப்பாண்டு தை திருவிழா, கடந்த 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 30ம் தேதி கம்பம் நடுதலும், 5ம் தேதி பால்குட ஊர்வலமும் நடந்தது. பின்னர், 6ம் தேதி தண்டுமாரியம்மன் அழைத்து கும்பம் போடுதலும், நேற்று (7ம் தேதி) காலை உருளுதண்டம் போடுதல், பொங்கல் வைத்தல், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி விழா, மாலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

The post வழிவாய்க்கால் காளியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Thee Mithi Festival ,Kaliyamman Temple ,Pathwaikal ,Salem ,Kaliamman temple ,Salem Dadagapatti road ,Salem Dadakapatti ,Kaliyamman ,Thai ,Lahawaikal ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு