×

ஜெகனண்ணா கோரமுத்தா திட்டத்தின் கீழ் ₹4,416 கோடியில் பள்ளி குழந்தைகளுக்கு 16 வகை மதிய உணவுகள் வழங்கப்படுகிறது

*முதல்நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை

திருமலை : ஜெகனண்ணா கோரமுத்தா திட்டத்தின் கீழ் ₹4,416 கோடியில் பள்ளி குழந்தைகளுக்கு 16 வகையான மதிய உணவுகள் வழங்கப்படுகிறது என்று முதல் நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் பேசினார். ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாள் கூட்டத்தொடரில் கவர்னர் அப்துல்நசீர் நான்கு ஆண்டுகள் அரசு செய்த சாதனைகள், வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கி பேசியதாவது:

விஜயவாடாவில் உலகில் முதல்முறையாக சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காக அம்பேத்கரின் சிலை திறக்கப்பட்டது. இதுவரை 4 வரவு செலவுத் திட்டங்களுடன் பட்ஜெட் அறிமுகப்படுத்தியுள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை அரசு நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளது. விவசாயிகள், இளைஞர்கள், நெசவாளர்கள், முதியவர்கள், பெண்கள் ஆகியோர் பொருளாதார ரீதியாக அரசு திட்டங்களால் பலன் அடைந்துள்ளனர். ஆட்சிக்கு வந்த பிறகு கல்வித்துறைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

ஆந்திராவில் மனித வளர்ச்சிக் குறியீட்டின் தரத்தை உயர்த்த நவரத்னா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏழைக் குழந்தைகளுக்கு உலக தரத்தில் கல்வி அளிக்கப்படுகிறது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் நாடு – நேடு (அன்று – இன்று) திட்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பள்ளி பராமரிப்பு நிதி வழங்கப்படுகிறது. ஜெகனண்ணா கோரமுத்தா திட்டத்தின் கீழ் ₹4,416 கோடி செலவிடப்பட்டு 16 வகையான உணவுகள் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் வழங்கப்படுகிறது. ஜெகனண்ணா ஜெகனண்ணா வித்யாகாணிக்கை திட்டத்தின் கீழ் ₹3,367 கோடி செலவில் பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

294 அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ₹9.5 லட்சம் டேப்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜெகனண்ணாவின் விடுதி ஆசிர்வாதத்தின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ₹20 ஆயிரம் வழங்கப்படுகிறது. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டுக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் ேபசினார். இதில், அந்திர மாநில முதல்வர் ெஜகன் மோகன், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

முதல்நாள் சட்டசபை கூட்டம் நேற்று முடிந்த பிறகு சபாநாயகர் தம்மினேனி சீதாராம் தலைமையில் பிஏசி கூட்டம் நடத்தப்பட்டது. இதனை தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் புறகணித்தனர். அதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளைன இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், இறந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மூன்றாம் நாளில் (நாளை) மாநில அரசு சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ராஜேந்திரநாத் தாக்கல் செய்ய உள்ளார்.

The post ஜெகனண்ணா கோரமுத்தா திட்டத்தின் கீழ் ₹4,416 கோடியில் பள்ளி குழந்தைகளுக்கு 16 வகை மதிய உணவுகள் வழங்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Governor ,Tirumala ,Andhra State Legislative Assembly ,
× RELATED 31 மாதங்களுக்கு முன் போட்ட சபதத்தை...