×

ஜோத்பூரில் வன்முறை 2 போலீசார் காயம்

ஜோத்பூர்: ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஈத்கா மசூதியின் பின்புறம் நேற்று முன்தினம் மாலை சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த டிராக்டர் மற்றும் கடைக்கு தீ வைக்கப்பட்டது. அங்கிருந்த ஜீப் அடித்து சேதப்படுத்தப்பட்டது. அப்போது சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் போலீசார் இருவர் காயமடைந்தனர்.
மேலும் மோதலில் ஈடுபட்ட 50 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஜோத்பூரில் வன்முறை 2 போலீசார் காயம் appeared first on Dinakaran.

Tags : Jodhpur Jodhpur ,Eidgah Masjid ,Jodhpur, Rajasthan ,Jodhpur ,Dinakaran ,
× RELATED காஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி: ராஜஸ்தானில் சோகம்