×

அரூரில் விவசாயியை தாக்கிய 4 பேர் கைது

அரூர், பிப்.6: அரூர் அடுத்த பச்சினாம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி வேடியப்பன்(45). இவருக்கும், பக்கத்து நிலத்தைச் சேர்ந்த பொன்னுசாமி(60), மணி(45), கிருஷ்ணன்(50), செந்தில்குமார்(46) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக, முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வருவாய்த்துறையினர் அந்த பகுதியில் நிலஅளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பொன்னுசாமி, மணி, கிருஷ்ணன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், வேடியப்பனுடன் தகராறில் ஈடுபட்டதுடன், தகாத வார்த்தைகளால் திட்டி, செங்கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில், அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து பொன்னுசாமி, மணி, கிருஷ்ணன், செந்தில்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

The post அரூரில் விவசாயியை தாக்கிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Arur ,Aroor ,Vediyappan ,Pachinampatti ,Ponnusamy ,Mani ,Krishnan ,Senthilkumar ,
× RELATED அரூர் பகுதியில் விதி மீறி அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் பீதி