×

அரூர் பகுதியில் விதி மீறி அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் பீதி

அரூர் : அரூர் பகுதியில் விதி மீறி அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால், வாகன ஓட்டிகள் பீதிக்குள்ளாகி வருகின்றனர். ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சேலம், கோவை, ஈரோடு, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள், பைபாஸ் சாலையில் செல்லும் லாரிகள், குறிப்பிட்ட அளவு பாரத்தை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால், விதி மீறி அளவிற்கு அதிகமான பாரம் ஏற்றிச் செல்கின்றனர்.

குறிப்பாக தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் விதி மீறல் அதிகரித்துள்ளது. இதில், லாரிகளில் பாரம் ஒருபுறமாக சாய்ந்து விபத்துகள் நிகழ்கிறது. இதுபோன்ற சமயங்களில் பக்கவாட்டில் செல்லும் வாகனங்களில் மோதியோ, பாரம் தாங்காமல் சாய்ந்து விழுந்தாலோ பெரிய அளிவலான விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அரூர் பைபாபஸ் சாலையில் அளவிற்கு மீறி டயர் ஏற்றி செல்லும் லாரியிலிருந்து எப்போது பாரம் கீழே விழுமோ என்ற பயத்தில் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே இது போன்று அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை அதிகாரிகள் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வலியுறுத்தி உள்ளனர்.

The post அரூர் பகுதியில் விதி மீறி அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் பீதி appeared first on Dinakaran.

Tags : Arur ,Aroor ,Andhra Pradesh ,Karnataka ,Uttar Pradesh ,Chennai ,Vellore ,Salem ,Coimbatore ,Erode ,Trichy ,Tirupur ,
× RELATED அரூரில் 19ம்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு