×

பாஜவிடம் சீட் கேட்டேனா? ஜி.கே.வாசன் ஷாக்

கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறார். இதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 12ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இயக்கத்தின் மூத்த தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் இயக்கத்தின் பணிகள், தேர்தல் வியூகம், இயக்கத்தின் கூட்டணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

செயற்குழு கூட்டத்திற்கு பின்பு செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளை கேட்டு நான்கைந்து நாட்களில் தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக கட்சியிலிருந்து வெளிவரும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை காலை இருப்பதால் டெல்லி செல்கிறேன். பாஜவில் கட்சி சம்பந்தமாகவும், தேர்தல் சம்பந்தமாகவும், கூட்டணி சம்பந்தமாகவும் இந்தியா முழுவதும் பேசுவதற்கு அக்கட்சியின் பொறுப்பாளர்கள் மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாஜவில் குறிப்பிட்ட இடங்களை கேட்டதாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது.

The post பாஜவிடம் சீட் கேட்டேனா? ஜி.கே.வாசன் ஷாக் appeared first on Dinakaran.

Tags : Baja ,GK Vasan Shock ,Coimbatore ,Tamil State Congress Party ,President ,GK Vasan ,Delhi ,BJP ,
× RELATED சட்டசபை தேர்தல் முடிவுகள்;...