×

காட்டு யானை தாக்கி காயமடைந்த தொழிலாளிக்கு நிவாரண தொகை

தேவாரம், ஜன. 30: தேவாரம் அருகே யானை தாக்கியதால் காயமடைந்த தொழிலாளிக்கான நிவாரண தொகையை எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் வழங்கினார். வருசநாடு பகுதியை அடுத்துள்ள பண்ணைப்புரத்தை சேர்ந்தவர் ராமு. கூலித்தொழிலாளியான இவர் சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் தோட்ட காவல் வேலைக்கு சென்றிருந்தார். அபபோது ராமு மீது வனப்பகுதிக்குள் இருந்து வந்த ஒற்றை மக்னா என்ற காட்டு யானை தாக்குதல் நடத்தியது. இதில் காயமடைந்த ராமு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார்.

இதற்கிடையே காட்டு யானை தாக்கி காயமடைந்த தொழிலாளிக்கு தமிழக அரசின் வனத்துறை சார்பில் ரூ.59 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி பண்ணைபுரம் சென்ற கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ தொழிலாளி ராமுவிடம், நிவாரண தொகை ரூ.59 ஆயிரத்திற்கான காசோலையை, வழங்கினார். இந்நிகழ்வில், உத்தமபாளையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குமரன், பண்ணைப்புரம் பேரூர் திமுக செயலாளர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post காட்டு யானை தாக்கி காயமடைந்த தொழிலாளிக்கு நிவாரண தொகை appeared first on Dinakaran.

Tags : Devaram ,MLA ,Kambam Ramakrishnan ,Dewaram ,Ramu ,Varusanadu ,
× RELATED சைவத்தைத் தழைக்கச் செய்த திருஞானசம்பந்தர்