×

மாநில அளவிலான யோகா போட்டி

சேலம்: சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட ப்ரீ ஸ்டைல் யோகா சங்கம் சார்பில், மாநில அளவிலான ப்ரீ ஸ்டைல் யோகா சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது. மாநில பொதுச்செயலாளர் மாங்க் பிரசாத், மாவட்டத் தலைவர் சோலை ஆகியோர் தலைமை வகித்து போட்டியை தொடங்கி வைத்தனர். 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தனிநபர், குழு பிரிவில் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

The post மாநில அளவிலான யோகா போட்டி appeared first on Dinakaran.

Tags : State Level Yoga Competition ,Salem ,state level pre style yoga championship competition ,Salem Gandhi Sports Ground ,District Pre Style Yoga Association ,State General Secretary ,Monk Prasad ,Cholai ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...