வேலூர்: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்க உள்ள நிலையில் அதுதொடர்பான அச்சத்தை போக்க பிரதமர் மோடியின் உரையை பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ வாரியம் உத்தரவிட்டுள்ளது. மத்திய கல்வித்துறையின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை பயமின்றி, மன தைரியத்துடன் எழுதுவதற்காக, மத்திய, மாநில கல்வி துறைகளின் சார்பில், உளவியல் கவுன்சலிங் வழங்கப்படுகிறது. மத்திய கல்வித்துறை சார்பில் வரும் 29ம்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டெல்லியில் நடக்கும் இந்த நிகழ்ச்சி, நாடு முழுவதும் சமூக வலைதளங்கள் வழியாக, நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரலையை அனைத்து பள்ளிகளிலும் திரை வைத்து ஒளிபரப்பி, மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அச்சத்தை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அனைத்து சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
The post சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அச்சம் போக்க நடவடிக்கை பிரதமர் மோடியின் உரையை ஒளிபரப்ப உத்தரவு appeared first on Dinakaran.