×

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் வரவேற்பு

சேலம்: தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் முனிஷ் வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் வழி நின்று, சீர்மிகு ஆட்சி புரிந்து வரும் முதலமைச்சரின் ஆசியுடன், ஆசிரியர் மனசறிந்து உள்ளபடியே சீரிய நிர்வாகத் திறனால், அனைத்துவகை கல்வி மற்றும் கல்விசார் நிலைகளிலும் சிறப்பாக செயல்பட்டு, நிதி நெருக்கடியுள்ள சூழலிலும் தாயுள்ளத்தோடு ஆசிரியர்களின் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் பணிபுரிந்து வரும் 12,105 பகுதிநேர பயிற்றுநர்களின் தொகுப் பூதியத்தை ₹10,000-லிருந்து ₹12,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரசுப்பள்ளிகளில் உள்ள அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனம் செய்யும்போது பின்பற்றப்படவேண்டிய கால அட்டவணை நிர்ணயித்து, ஆசிரியர்களைத் தேர்வு செய்வதில் தமிழக வரலாற்றில் புது அத்தியாயம் தொடங்கியதன் மூலம், நிர்வாக சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

The post அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Government School Teachers Association ,Salem ,General Secretary ,Tamilnadu Government School Teachers' Association ,Munish ,Tamil Nadu ,Dr. ,Karansha ,Chief Minister ,Government School Teachers' Association ,Dinakaran ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...