×

கன்னி ராசி: வண்ணங்களும் எண்ணங்களும்

உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு ஆற்றலை தாங்கியிருக்கிறது. அப்படி இருக்கின்ற ஒவ்வொரு பொருளும் ஆற்றலுடன் ஒவ்வொரு செயல்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. அப்படி இயக்கும் வண்ணத்தை நாம் நேர்மறை ஆற்றலாக மாற்றும் சக்தியை பெறுவோம்.

கன்னி ராசி: காலபுருஷனின் ஆறாம் ராசியாக கன்னி வருகிறது. கன்னி ராசிக்கு பிங்க் நிற வண்ணம் நற்பலன்களையும், லட்சுமி கடாட்சத்தையும் அளிக்கும் தன்மை உடையது. கன்னி ராசிக்கு தனாதிபதியாக வரக்கூடியது துலாம் ராசியாகவும், பாக்யாதிபதியாக ரிஷபம் ராசியாகவும் உள்ளது. இதன் அதிபதி சுக்ரனாக உள்ளார். இவர்கள் பணம் ஈட்டும் இடங்களிலும் பணத்தேவைக்காக வெளியே செல்லும் நேரங்களில் பிங்க் வண்ணத்தை பயன்படுத்தினால், நேர்மறையான பலன்கள் உண்டாக்கும்.

கன்னி ராசிக்கு நான்காம் அதிபதியாக தனுசு ராசியும், ஏழாம் அதிபதியாக மீனம் ராசியும், இருப்பதால் மஞ்சள் வண்ணத்தை வீடு, வாகனம் மற்றும் வியாபாரத் தலங்களில் மஞ்சள் நிற வண்ணத்தை பயன்படுத்துவதால் நற்பலன்கள் கிட்டும். மஞ்சள் அதிக அலைநீளம் உடைய வண்ணம் என்பதால் இதன் பலன்கள் மிகுந்த நன்மை கிட்டும். மஞ்சள் நிற வண்ணத்தை பயன்படுத்தும் தருணங்களில், பிங்க் நிற வண்ணத்தை தவிர்த்து விடுவது நன்மை தரும்.

கன்னிக்கு ஐந்தாம் பாவகம் மற்றும் ஆறாம் பாவகமாக (மகரம், கும்பம் ராசிகள்) வருகிறது. இதன் அதிபதி சனி பகவான் ஆவார். ஆகவே, நீலநிற வண்ணம் நன்மை தீமையும் கலந்த பலன்களே உண்டாக்கும். கோட்சாரத்தில் ஆறாம் வீட்டில் (கும்பம்) சனி பகவான் இருக்கும் போதும் எட்டாம் வீட்டில் (மேஷம்) சனி பகவான் அமரும்போது நீலத்தை தவிர்த்துவிடுவது நன்மை தரும். சனி பகவான் குளிர்ச்சியான கிரகம் என்பதால், மற்ற கிரகங்களின் ஆற்றல்களை தனதாக்கிக் கொள்ளும் தன்மை உடைய கிரகம்.

கன்னி ராசிக்கு மூன்றாம் மற்றும் எட்டாம் அதிபதியாக விருச்சிகம் மற்றும் மேஷம் ராசி வருகிறது. இதன் அதிபதி செவ்வாய் வருவதால் முடிந்தவரை சிவப்பு வண்ணத்தை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். நேர்மறை ஆற்றல்கள் அதிகமாகும். முடிந்தவரை சிவப்பு வண்ணத்தாலான பொருட்களை நீங்கள் தானம் செய்துவிடுங்கள். உங்களிடம் ஏற்கனவே உள்ள எதிர்மறை ஆற்றல்கள் யாவும் உங்களைவிட்டு விலகும். கோட்சாரத்தில் மேஷத்தில் செவ்வாய் அமரும்போதோ அல்லது மேஷத்தை செவ்வாய் பார்வை செய்யும்பொழுது முடிந்தவரை சிவப்பு வண்ணத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

சிம்மத்ைதயும் கன்னியையும் தவிர அனைத்து ராசிகளுக்கும் அதிபதிகள் இரண்டு பாவங்களை ஆட்சி செய்வதால் இரட்டை பலன்கள் ஏற்படும். ஆதலால், நன்மையும் தீமையும் கலந்த பலன்களே ஏற்படும். உங்கள் ராசிக்கு பதினோராம் அதிபதியாக கடகம் வருகிறது. வெற்றி ஸ்தானத்தின் அதிபதி சந்திரனாக வருவதால். நீங்கள் பௌர்ணமி அன்று அம்பாளை மனமுருக பிரார்தனை செய்யுங்கள் உங்கள் வெற்றிக்கான சிந்தனைகளை நீங்கள் உங்கள் உழைப்பில் விதைப்பீர்கள்.

அதற்கான சிந்தனைகளை இயற்கை உங்களுக்கு அளிக்கும். ஆகையால், வெண்மை நிறத்தை திங்கள் மற்றும் பௌர்ணமி தினங்களில் பயன்படுத்துங்கள் வெற்றிக்கான வழி உண்டாக்கும். சிம்மம் உங்களுக்கு 12-ஆம் அதிபதியாக வருவதால், நீங்கள் ஆரஞ்சு வண்ணத்தை சரியாக பயன்படுத்துங்கள். உங்களுக்கு சரியான வழிமுறைகள் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கு, சுபச் செலவுகளை செய்யும் காலகட்டங்களில் மற்றும் சித்தர்களை வழிபாடு செய்யும் தருணங்களில் நீங்கள் ஆரஞ்சு வண்ணம் பயன்படுத்துங்கள் உங்களுக்கு நற் சிந்தனைகளும் நன்மைகளும் உண்டாக்கும்.

வண்ணங்கள் பேசுகின்றன. ஒளிகளின் பிரதிபலிப்பின் வழியாக அதனை உணரும் மனம் நமக்கு வேண்டும். அவைகள் ஆற்றல்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இந்த பிரதிபலிப்பின் வழியாக எடுத்துச் செல்கின்றன. நேர் மறையான ஆற்றல்களை நாம் வண்ணத்தின் வழியாக வைத்திருப்போமானால், நமக்கும் நற் பலன்கள் உண்டாகி நன்மைகள் தரும் என்பது உண்மை.

தொகுப்பு: சிவகணேசன்

The post கன்னி ராசி: வண்ணங்களும் எண்ணங்களும் appeared first on Dinakaran.

Tags : Kalapurusha ,
× RELATED தொழில் மற்றும் உத்யோகம் வெற்றி பெற…