×

பாகிஸ்தானை யாராலும் தோற்கடிக்க முடியாது: புத்தாண்டில் ராணுவ தளபதி சூளுரை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று அந்நாட்டு ராணுவ தளபதி உரையாற்றினார். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், நாட்டு மக்கள் முன்பு ஆற்றிய உரையில், இந்தியாவுக்கு எதிராக வெறுப்பை பரப்பியுள்ளார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்தியாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு – காஷ்மீரை மீட்போம். கொடுங்கோல் ஆட்சியில் இருந்து ஜம்மு – காஷ்மீர் மக்கள் விடுவிக்கப்படுவார்கள்.

புத்தாண்டு தினத்தில் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். பாகிஸ்தானின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து பணியாற்றும். கடந்த 2023ம் ஆண்டு மிகவும் சவாலான ஆண்டாக இருந்தது. இப்போது அந்த ஆண்டு முடிந்துவிட்டது. வரும் ஆண்டு (2024) பாகிஸ்தான் மக்களுக்கு நல்லதாக அமைய பிரார்த்திக்கிறோம். தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்காது. பாகிஸ்தானை யாராலும் தோற்கடிக்க முடியாது’ என்று கூறினார்.

The post பாகிஸ்தானை யாராலும் தோற்கடிக்க முடியாது: புத்தாண்டில் ராணுவ தளபதி சூளுரை appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Sulurai ,New Year ,Islamabad ,Pakistan Army ,Azim Munir ,India ,
× RELATED 2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின்...