×

120 டிகிரி வெயில் கொளுத்துகிறது ஹஜ் யாத்திரையில் 1301 பேர் பலி

கெய்ரோ: சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை சென்றவர்களில் 1301 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதீனாவிற்கு இந்த ஆண்டு 18.3லட்சம் பேர் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். 22 நாடுகளை சேர்ந்த 16லட்சம் பேர் மற்றும் சவுதி குடிமக்கள் மற்றும் அங்கு குடியிருப்பவர்கள் 2,22,000 பேர் இதில் அடங்குவர். இந்த ஆண்டு மெக்காவில் வெயிலின் அளவு வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படுகின்றது. அங்கு 120 டிகிரி வெப்பம் நிலவி வருகின்றது.

இந்நிலையில் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் 1301 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் பஹின் பின் அப்துர்ரஹ்டான் அல் ஜலாஜெல் கூறுகையில்,‘‘ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் 1301 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் 83சதவீதம் பேர் அங்கீகரிக்கப்படாத பயணம் மேற்கொண்டவர்கள். இவர்கள் மக்கா மற்றும் அதனை சுற்றி ஹஜ் சடங்குகளை செய்வதற்காக நீண்ட தூரம் அதிக வெப்பநிலையில் நடந்து சென்றுள்ளனர். இறந்தவர்களில் பலரிடம் முறையான அடையாள ஆவணங்கள் இல்லை. இதனால் யார் என அடையாளம் காணும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

The post 120 டிகிரி வெயில் கொளுத்துகிறது ஹஜ் யாத்திரையில் 1301 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Hajj ,Cairo ,Saudi Arabia ,Ministry of Health ,Mecca ,Medina ,Haj ,
× RELATED நாய் குறுக்கே பாய்ந்ததால் பைக் கவிழ்ந்து இருவர் பலி