×

தேவாலயங்கள் மீது தாக்குதல்: ரஷ்யாவில் 20 பேர் பரிதாப பலி

மாஸ்கோ: ரஷ்யாவின் டாகேஸ்டான் மாகாணத்தில் டெர்பென்ட் நகர் மற்றும் மக்கச்சலாவில் உள்ள 2 தேவாலயங்கள், யூத வழிபாட்டு தலம் மற்றும் போக்குவரத்து போலீசாரின் காவல் நிலையம் மீது நேற்று முன்தினம் துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் தேவாலயம் தீப்பிடித்து எரிந்துள்ளது. வழிபாட்டுக்காக திரண்டு இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டபடி சிதறி ஓடினார்கள். இந்த தாக்குதலில் மத குரு ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 போலீசார் உட்பட 20 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 46 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தேசிய தீவிரவாத எதிர்ப்பு குழு ஆயுதமேந்திய கும்பல் மீது நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கி ஏந்திய 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post தேவாலயங்கள் மீது தாக்குதல்: ரஷ்யாவில் 20 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,Derbent ,Makhachkala ,Dagestan ,
× RELATED திட்டமிட்ட பேச்சுவார்த்தை திடீர்...